தனியார் பள்ளி ஆசிரியர்கள் வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை: அமைச்சர் மகேஷ் உறுதி

''தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

Update: 2021-06-30 03:44 GMT

''தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.


''தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

ஸ்ரீரங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று ஆய்வு மேற்கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது:

வரும் ஜூலை 31ம் தேதிக்குள் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. 12ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தேர்வு நடைபெறும். தற்போது 12ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் குறைவாக இருந்தால் அவர்களும் தனி தேர்வுகளில் கலந்துகொண்டு தேர்வு எழுதலாம்.

கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் இந்த தேர்வு எழுதுவது சாத்தியமாகும். அந்த நேரத்தில் அரசு எடுக்கும் முடிவுக்கு ஏற்றவாறு செயல்படுவோம். தனியார் பள்ளிகளில் ஆசிரியராக இருந்தவர்கள் பேக்கரிகளிலும், பெயின்டராகவும் வேலை செய்யும் நிலை உள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் எனக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

கண்டிப்பாகல, தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க முதலமைச்சர் ஸ்டாலினிடம் பேசுவேன். தமிழகத்தில் நீட் தேர்வை நுழையவிடாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.





Tags:    

Similar News