திருச்சி அந்தநல்லூர் ஒன்றியத்தில் வருமுன் காப்போம் மருத்துவமுகாம்

திருச்சி அருகே உள்ள அந்தநல்லூர் ஒன்றியத்தில் வருமுன் காப்போம் மருத்துவமுகாம் நடத்தப்பட்டது.

Update: 2022-03-11 12:30 GMT

திருச்சி அந்தநல்லூர் ஒன்றியத்தில் வருமுன்காப்போம் மருத்துவ முகாம் நடந்தது.

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் முள்ளிக்கரும்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொது சுகாதாரதுறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமிற்கு முள்ளிக்கரும்பூர் ஊராட்சி மன்ற தலைவர் கீதா துரைராஜ் தலைமை தாங்கினார். அந்தநல்லூர் ஒன்றிய குழு தலைவர் துரைராஜ் முன்னிலை வகித்தார் . வட்டார தலைமை மருத்துவ அதிகாரி விக்னேஸ்வரன் வரவேற்றார்.

இந்த மருத்துவ முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், சிறுநீர் பரிசோதனை, ஸ்கேன், இ.சி.ஜி, பொது மருத்துவம்  உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கு அரசு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சித்த மருத்துவம் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் மூலமும் சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக குழுமணி ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம், ஒன்றிய கவுன்சிலர் சண்முகவடிவு, மாவட்ட கவுன்சிலர் பாக்கியலெட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 261 பயனாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.  முடிவில் கிராம சுகாதார செவிலியர் தனசீலி நன்றி கூறினார்.

Similar News