ஸ்ரீரங்கத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஸ்ரீரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-07 04:00 GMT
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

திருச்சி நவலூர் குட்டப்பட்டில் உள்ள ஸ்ரீரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் காலவரையற்ற தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் நேற்று காலை ஈடுபட்டனர். தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வை பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்கள், மணி நேர கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையுடன் கூடிய ஊதிய உயர்வை வழங்க வேண்டும்.

கடந்து 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் பல்கலைக்கழக தினக்கூலி பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியத்தை போன்று உறுப்புக் கல்லூரிகளில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் நிலுவைத்தொகையுடன் கூடிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இரவு வரை யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால்,  இந்த போராட்டம் நள்ளிரவிலும் நீடித்தது.

Tags:    

Similar News