ஸ்ரீரங்கத்தில் புதிய நீச்சல் குளத்தில் கும்மாளமிடும் லட்சுமி, ஆண்டாள் யானைகள்

புதிய நீச்சல் குளத்தில் கும்மாளமிடும் ஸ்ரீரங்கம் கோயில் லட்சுமி, ஆண்டாள் யானைகளை பொதுமக்கள் பார்த்து மகிழ்ந்தனர்.

Update: 2021-10-25 08:45 GMT

ஸ்ரீரங்கம் கோயில் சார்பாக கோயில் யானைகள் குளிக்க, யானை நீச்சல் குளம் கட்டபடப்டது. இதில் கும்மாளமிடும் கோயில் யானை ஆண்டாள், லட்சுமி, 

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர்

திருக்கோவிலில் லட்சுமி, ஆண்டாள் என 2 யானைகள் கோவில் கைங்கரியத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த இரு யானைகள் குளிப்பதற்கு ஏதுவாகவும், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் யானை குளிக்க வசதியாக  குளம் ஒன்று அமைக்கப்பட்டதைப் போன்று.ஸ்ரீரங்கத்திலும் நீச்சல் குளம் அமைக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்ப்பட்டது.


இந்த நிலையில் யானைகள் ஆண்டாள் மற்றும் லட்சுமி குளிப்பதற்காக ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பஞ்சக்கரை சாலையில் கோயிலுக்கு சொந்தமான "உடையவர் தோப்பில்" 56-அடி நீளம் 56-அடி அகலம் , 6.5 அடி உயரத்தில் 3 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய நீச்சல் குளம் கட்டப்பட்டது.


அந்த குளத்திற்க்கு இன்று காலை கோயில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் சிறப்பு பூஜை செய்தார். பின்பு கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் ஆண்டாள் மற்றும் லட்சுமி ஆகிய இரண்டு யானைகளும் முதன் முறையாக குளத்தில் குளிக்க வைக்கப்பட்டது. இரு யானைகளும் நீச்சல் குளத்தில் குதித்து, குளித்து கும்மாளமிட்டது, இதனை பொதுமக்கள் பார்த்து மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News