திருச்சியில் பெண்ணை தாக்கியவருக்கு சிறை

சரவணன் கட்டையால் தாக்கியதில் தனசுந்தரி காயமடைந்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.;

Update: 2021-12-24 09:30 GMT
திருச்சியில் பெண்ணை தாக்கியவருக்கு சிறை

பைல் படம்.

  • whatsapp icon

திருச்சி திருவானைக்காவல் திம்மராயசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் தனசுந்தரி (வயது 42). இவரின் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் சரவணன் (வயது 41). இவரின் வீட்டில் இருந்து வெளியேறிய தண்ணீர் தனசுந்தரி வீட்டில்  ஊற்றி உள்ளது. இதுகுறித்து தனசுந்தரி சரவணனிடம் முறையிடவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சரவணன் கட்டையால் தாக்கியதில் தனசுந்தரி காயமடைந்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சரவணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News