ஸ்ரீரங்கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமுக்கடித்து போராட்டம்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமுக்கடித்து போராட்டம் நடத்தினர்.
இந்து சமய அறநிலையத்துறை நிதி ஒதுக்கீடு செய்த பின்னரும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சேதமடைந்த கிழக்கு வாசல் கோபுரத்தை சரிசெய்யும் பணி கடந்த 6 மாத காலமாக நிறைவடையவில்லை. அதனால் பள்ளி குழந்தை கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அந்த பாதை யை பயன்படுத்த முடியாத வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல கோவி லுக்கு பலஇடங்களில் நிறைய சொத்துக்கள் இருக்கும் நிலையில் தினந்தோறும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் பெருமாளை தரிசிக்கவந்து செல்லும் வெளியூர் பக்தர்களுக்கு, வாகனங்களை நிறுத்து வதற்கு உரிய இடத்தை கோவில் நிர்வாகம் இதுவரை ஒதுக்கவில்லை.
இது போன்ற குறைகளை சரி செய்யாத கோவில் நிர்வாகத்தை கண்டித்து, திருச்சி ஸ்ரீரங்கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமுக்கடித்து நூதன போராட்டத்தில்இந்தப் போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பகுதி செயலாளர் சந்துரு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்லெனின், மாவட்ட செய லாளர் சேதுபதி ,மாவட்ட பொருளாளர் நவநீத கிருஷ்ணன், பகுதி தலைவர் லோகநாதன், பகுதி துணைத்தலைவர் ஜெயக்குமார் ,பகுதி பொருளாளர் ரங்கராஜ் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.