திருச்சியில் மனைவி குடிக்க பணம் தராததால், கணவன் தற்கொலை

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையில் மனைவி குடிக்க பணம் தராததால் கணவன் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.;

Update: 2021-04-27 01:00 GMT

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் என்கிற மருதமுத்து. டிரைவரான இவர் குடி பழக்கத்திற்கு அடிமையாக இருந்து வந்துள்ளார்.இவரின் மனைவி கோகிலாவிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.

ஆனால் கோகிலா பணம் தர மறுத்ததால் மனமுடைந்த அவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார் இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News