திருச்சி அருகே ஜீயபுரத்தில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

திருச்சி அருகே ஜீயபுரத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.;

Update: 2021-10-22 07:00 GMT

திருச்சி அருகே ஜீயபுரத்தில் நடந்த தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

தமிழகத்தில் தி.மு.க. அரசு அமைந்து நூறு நாட்களை தாண்டிவிட்டது. இந்நிலையில்  தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்பட்டு உள்ளன. மேலும் பல்வேறு மக்கள் நல திட்டங்களும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழக அரசின் சாதனைகள் பற்றிய புகைப்பட கண்காட்சி திருச்சி மாவட்டம் அந்த நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த ஜீயபுரத்தில் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த கண்காட்சியில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த பல்வேறு திட்டப்பணிகள் மற்றும் திருச்சி மாவட்டத்தில் நடைமுறைக்கு வந்துள்ள மக்கள் நல திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெற்று இருந்தன. திருச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் நடைபெற்ற இந்த கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்த்தனர்.


Tags:    

Similar News