திருச்சியில் சிறுமி கர்ப்பம்: காதலன். தந்தை உள்பட 3 பேர் கைது

திருச்சியில் சிறுமி கர்ப்பம். கணவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-11-26 15:17 GMT

திருச்சி உறையூர் பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் மருதாண்டாகுறிச்சி, மேல பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (வயது 19) என்பவருக்கும் காதல் ஏற்பட்டு உள்ளது. காதலர்கள் இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்துள்ளனர். இதன் காரணமாக 17 வயது காதலி கர்ப்பமாகி உள்ளார். இதனை தொடர்ந்து இருவரின் பெற்றோர்கள் முன்னிலையில் அரவனூர் மாரியம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக 17 வயது மாணவி திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் முத்துக்குமார், அவரின் தந்தை முருகசன் (வயது 54), சிறுமியின் தந்தை ரஜினிகாந்த் (வயது 45) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Tags:    

Similar News