ஸ்ரீரங்கத்தில் பிரபல ரவுடி கொன்று புதைப்பு
ஸ்ரீரங்கத்தில் ரவுடி கொன்று புதைக்கப்பட்ட சம்பவத்தில்விசாரணை நடத்தி ரவுடியை கொலை செய்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் பிரபல ரவுடி கொன்று புதைக்கப்பட்ட சம்பவத்தில் உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். ரவுடியை கொலை செய்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி நவீன்,பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய இவர் கடந்த 7ம் தேதி நண்பர்களுடன் கொள்ளிடம் தஆற்றங்கரையில் மது அருந்த சென்றுள்ளார்.அதன் பிறகு அவரை காணவில்லை என்பதால் அவருடைய தந்தை தனது மகனை காணவில்லை என ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்,போலீசார் விசாரணையை தொடங்கினர்.
அவருடன் நெருக்கமாக இருந்த 7 க்கும் மேற்பட்டவர்களை விசாரணை வளையத்தில் கொண்டு வந்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று மீண்டும் தீவிர விசாரணையை தொடங்கிய நிலையில் கடந்த 7ம் தேதி இவர்கள் அனைவரும் மது அருந்தும் போது நவீனுக்கும் இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது அடித்துக் கொன்று கொள்ளிடம் ஆற்றங்கரையில் புதைத்துள்ளதாக தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஸ்ரீரங்கம் காவல் துறை உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி மற்றும் ஸ்ரீரங்கம் காவல் நிலைய ஆய்வாளர் கழனியப்பன் மற்றும் தாசில்தார் மகேந்திரன் உள்ளிட்டோர் தலைமையில், ரவுடி நவீனின் உடலை தோண்டி எடுத்து சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். அதன் பின்னர் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து அவர்களிடம் விசாரணை செய்த போது இவர்களுடன் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் உறவினர்களை தொடர்ந்து மிரட்டி அவர்களுடன் உறவு வைத்துக் கொண்டதால் அதனை தட்டிக் கேட்டும் அவர் தொடர்ந்து மிரட்டியதால் கொலை செய்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த மம்மி என்கிற சந்திரு (39), கோவில் பிள்ளை (47), ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பகுதியை சேர்ந்த டாங்கி என்கிற சங்கர் (32), மணிமாறன் (34), கீழ வாசலை சேர்ந்த விஜயகுமார் (37) ஆகிய 5 நபர்களை ஸ்ரீரங்கம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்,அவர்களிடம் மேலும் தீவிர விசாரனை நடைபெற்று வருகிறது.
இந்த கொலை தொடர்பாக மேலும் பலருக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.