திருச்சியில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது
திருச்சியில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 33). இவர் திருவானைக்காவல் டிரங்க் ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த மண்ணச்சநல்லூர் இச்சிகாம்பட்டியை சேர்ந்த பாலா என்கிற தனவேந்தன் (வயது 20), திருவாணைக்காவல் மேல கொண்டையம் பேட்டையை சேர்ந்த குமரேசன் (வயது 24) ஆகியோர் சந்தோஷ் குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500-ஐ பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
இது குறித்து புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து தனவேந்தன், குமரேசன் ஆகிய இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.