திருச்சி திருவானைக்காவலில் மூங்கில் துணையில் நிற்கும் மின்கம்பம்
திருச்சி திருவானைக்காவலில் மூங்கில் துணையோடு நிற்கும் மின் கம்பத்தை மாற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.;
திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட ஆறாவது வார்டில் நடு கொண்டையம் பேட்டை உயர்நிலைப் பள்ளி அருகில் மின் கம்பம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகளையும் பழி வாங்குவதற்கு காத்திருப்பதாக அப்பகுதி மக்கள் கருதுகிறார்கள்.
இந்த மின்கம்பமானது தற்போது மூங்கில் ஏணியின் துணையோடு நின்று கொண்டிருக்கிறது. எனவே மின் வாரிய அதிகாரிகளும் ஸ்ரீரங்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் இதனை கவனத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.