ஸ்ரீரங்கம் கோயிலில் நள்ளிரவில் இடிந்து விழுந்த கிழக்கு கோபுர சுவர்

trichy temple wall collapsed- ஸ்ரீரங்கம் கோயிலில் கிழக்கு கோபுரம் முதல் நிலையில் உள்ள சுவர் இடிந்து விழுந்ததில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.;

Update: 2023-08-05 02:37 GMT

இடிந்து விழுந்த சுவர்.

trichy temple wall collapsed -திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் சுவர் நள்ளிரவில் இடிந்து விழுந்தது. நள்ளிரவு என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலின் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் இரண்டு நிலைகளிலும் மேற்கூரை பூச்சுகளும் அதனை தாங்கி நிற்கும் தூண்களும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அபாயகரமாக இருந்த கிழக்கு வாசல் கோபுர வழியாகச் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இதனால் அச்சத்துடன் செல்லும் நிலையே நிலவி வந்தது.

மேலும் நேற்று மாலை திருச்சி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் வரை பரவலாக மழை பெய்தது.

இந்த நிலையில் நள்ளிரவு சுமார் 1.30 மணியளிவில் இரண்டு மணியளவில் அரங்கநாதன் கோவிலின் கிழக்கு நுழைவு வாயிலில் சேதமடைந்த கோபுரத்தின் இரு நிலைகளிலும் உள்ள பூச்சுகள் இடிந்து விழுந்தன. நள்ளிரவு நேரத்தில் இடிந்து விழுந்ததால் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை. பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இன்று காலை இடிந்து விழுந்த கற்கள் மற்றும் பூச்சுகளை அப்புறப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். எனவே அந்த கோபுரத்தின் வழியாக பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என கோவில் நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News