பணப்பிரச்சினையில் திருச்சி தி.மு.க. வட்ட செயலாளருக்கு கத்திக் குத்து

திருச்சியில் தி.மு.க வட்ட செயலாளர் கத்தியால் குத்தப்பட்டது தொடர்பாக பகுதி செயலாளர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.;

Update: 2021-10-31 12:12 GMT

திருச்சி திருவானைக்காவலில் கத்தி குத்தில் காயம் அடைந்த தி.மு.க. வட்ட செயலாளர் கண்ணன்.

திருச்சி திருவாணைகாவலை சேர்ந்தவர் கண்ணன். தி.மு.க.வின் வட்ட செயலாளரான இவரது வீட்டுக்கு நேற்று இரவு நான்கு பேர் சென்றுள்ளனர். அவர்கள், பகுதி செயலாளர் ராம்குமார் உங்களை அழைக்கிறார் என்று கூறியுள்ளனர் இதையடுத்து கண்ணன் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது வீட்டின் அருகே வாசலில் வைத்து அந்த 4 பேரும் கண்ணனை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த கண்ணன் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கத்தியால் குத்தப்பட்ட தி.மு.க வட்ட செயலாளர் கண்ணனுக்கும் பகுதி செயலாளர் ராம்குமார் என்பவருக்கும் எட்டு மாதத்திற்கு முன்பு நடந்த தி.மு.க. மாநாட்டுக்கு வேன்களில் தொண்டர்களை அழைத்து சென்றதற்காக ஏற்பட்ட செலவு தொடர்பாக தகராறு இருந்து வதந்தாகவும். நேற்று காலை பகுதி செயலாளர் ராம்குமாரை சந்தித்த கண்ணன் வேன் வாடகைக்காக எனது நகையை அடமானம் வைத்து கொடுத்தேன். தற்போது அந்த நகை மூழ்கும் நிலையில் உள்ளது, நீங்கள் பணம் கொடுக்காமல் இன்னமும் இழுத்து அடித்தால் அமைச்சர் கே.என்.நேருவிடம் நேரில் புகார் தெரிவிப்பேன் என்று கூறியதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து நள்ளிரவு கண்ணன் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். இது குறித்து கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News