வயலூர் முருகன் கோவிலில் தமிழில் அர்ச்சனை நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
வயலூர் முருகன் கோவிலில் தமிழில் அர்ச்சனை நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம் சமூக நீதிபேரவை, ம.க.இ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.;
தமிழில் அர்ச்சனை நடத்தக்கோரி வயலூர் முருகன் கோவிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின் கீழ் இரண்டு அர்ச்சகர்கள்திருச்சி மாவட்டம் வயலூர் முருகன் கோவிலில் பணி நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் அவர்களை கடந்த 8 மாதமாக அர்ச்சனை செய்ய விடாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர்.
இதனை கண்டித்துசமூக நீதிப் பேரவை தலைவர் ரவிக்குமார் தலைமையில் மக்கள் அதிகாரம் மாநில குழு உறுப்பினர்கள் மக்கள் கலை இலக்கியக் கழகம் மாவட்ட செயலாளர் ஜீவா மக்கள் கலை இலக்கிய கழகம் கலைக்குழுவினர்லதா , சத்யா ,ஆனந்த் மணலி தாசன், சரவணன்,ஹரிஹரன்,சமூகநீதிப் பேரவை மணிகண்டன், நாச்சி சிம்பு ,பள்ளக்காடு சேகர் ,மூர்த்தி ஆகியோர் வயலூர் முருகன் கோவிலில் தமிழில் அர்ச்சனை நடத்தப்படவேண்டும் என்று கூறி இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்நிகழ்வின் போது காவல்துறை டி.எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சமூக நீதிப் பேரவை ரவிக்குமார் தலைமையில் மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் மற்றும் மக்கள் அதிகாரத்தினர் திரண்டு முருகன் சன்னதி முன்பு தமிழில் அர்ச்சனை செய்ய வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து அமைப்பினர்களை அழைத்து சென்று அரசால் நியமிக்கப்பட்ட அச்சகர்களை வைத்து முருகன் சன்னதி முன்பு தமிழில் அர்ச்சனை நடைபெற்றது.
அப்போது பிராமண அர்ச்சகர்கள் உள்ளே வரவில்லை உள்ளே வர மறுத்து விட்டனர். பிறகு அமைப்பினர்கள் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா, முப்பாட்டன் முருகனுக்கு அரோகரா என்று முழக்கங்கள் எழுப்பினர். இவர்களுக்கு எதிராக இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் அயோத்தியில் வாழும் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு அரோகரா என்று எதிர் முழக்கங்களை எழுப்பினார்கள். பிறகு செயல் அலுவலர் அருண்பாண்டியன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இப்பேச்சுவார்த்தையில் அமைப்பினர்கள் தொடர்ந்து தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கையை வலியுறுத்தினர். இதை செயல் அலுவலர் அருண்பாண்டியன் ஏற்க மறுத்ததுடன் சுழற்சி முறையில் மட்டுமே வழிபாடு நடத்த முடியும் என்று கூறினார் .அதற்கு அமைப்பினர் சுழற்சிமுறை வழிபாட்டிற்கு அரசாணை உண்டா என்று கேட்டதற்கு அரசாணையை காண்பிக்க மறுத்துவிட்டார்.
இந்நிகழ்வில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற அரசாணை வயலூர் முருகன் கோவிலில் அமல்படுத்தப்படும் வரை இங்கு போராட்டம் நடப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும் என்று சமூக நீதிப் பேரவை ரவிக்குமார், மக்கள் கலை இலக்கியக் கழக மாவட்டச் செயலாளர் ஜீவா ஆகியோர் தெரிவித்தனர்.