கொடியாலம் ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அந்தநல்லூர் ஒன்றியம் கொடியாலம் ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.

Update: 2021-10-30 07:00 GMT

மாதிரி படம் 

அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் கொடியாலம் ஊராட்சியில் 1,2,3 ,4 ஆகிய வார்டுகளில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஆள்துளை கிணறு மூலம் குடிதண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.

தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துக் கூறியும் தண்ணீர் பற்றாக்குறையை போக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கொடியாலம் ரயில்வே கேட் பகுதியில் உள்ள காவிரி குடிநீர் பைப்பிற்கு சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சென்று தண்ணீர் பிடித்து வர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று தண்ணீர் பிடிப்பதால் அலுவலகத்திற்கு செல்பவர்கள் மற்றும் தனியார் வேலைக்குச் செல்பவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இந்த பகுதியில் மக்களின் கோரிக்கையான தண்ணீர் பற்றாக்குறையை போக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News