கொரோனா தடுப்பூசி செலுத்த வந்த டாக்டருக்கு மோடியின் வாழ்த்து அட்டை
கொரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்ற டாக்டருக்கு பிரதமர் மோடி கையெழுத்திட்ட வாழ்த்து அட்டை வழங்கப்பட்டது.
கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி போடுவதற்கு அரசு சார்பில் மொகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அந்தநல்லூர் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட குழுமணி பஞ்சாயத்தில் நடைபெற்ற 6-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு நடத்திய பின்பு அங்கு பணியாற்ற வந்த டாக்டர் விக்னேஸ்க்கு, பாரத பிரதமர் மோடி, கையெழுத்திட்ட வாழ்த்து அட்டையை பா.ஜ.க மாவட்ட மகளிர் அணி தலைவி ஆர்.புவனேஸ்வரி, திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க துணை தலைவர் சி. இந்திரன் ஆகியோர் வழங்கினர்.
இதில் மண்டல் தலைவர் அழகர், மாவட்ட ஊரக வளர்ச்சி செயலாளர் எட்டரை பாஸ்கர், மாவட்ட ஊடக வளர்ச்சி பிரிவு பொறுப்பாளர் சிவக்குமார், பொன்மலை மண்டல் தலைவர் இளங்கோவன், மண்டல் பொதுசெயலாளர் கார்த்தி, பிரச்சார பிரிவு பொறுப்பாளர்கள் மற்றும் அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய பா.ஜ.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.