ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் தரிசனம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் சுவாமி தரிசனம் தரிசனம் செய்தார்.;
தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் தனி விமானத்தில் திருச்சிக்கு வந்தடைந்தார். விமான நியைத்தில் அவரை திருச்சி கலெக்டர் சிவராசு வரவேற்றார்.
பின்னர் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த முதல்வர் சந்திரசேகர ராவுக்கு கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் அர்ச்சகர்கள் நந்தகுமார் பட்டர், ஹரிஷ் பட்டர், ராகவன் பட்டர், ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் சிந்துஜா, கோவில் உதவி ஆணையர் கந்தசாமி உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் வேத மந்திரங்கள் முழங்க வரவேற்றனர்
பின்பு சந்திரசேகரராவ் மூலஸ்தானம் சென்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், தெலங்கானா மாநில தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கே. டி.ராமாராவ், அமைச்சர்கள் குடும்பத்தினரும் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் உள்ள உற்சவர் மற்றும் தாயார் சன்னதி சென்றும் சாமி தரிசனம் செய்தனர்.