ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் காவிரி அன்னைக்கு சோமவார தீபம்

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் காவிரி அன்னைக்கு சோமவார தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது.;

Update: 2021-12-14 14:16 GMT
சோமவாரத்தையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் தீப வழிபாடு நடைபெற்றது.

கார்த்திகை மாதம் கடைசி திங்கட்கிழமை சோமவாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சோமவார தினத்தன்று சிவன் மற்றும் முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில்  நேற்று சோமவாரத்தையொட்டி காவிரி அன்னைக்கு தீப வழிபாடு நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டு காவிரி அன்னையை வழிபட்டனர்.

Tags:    

Similar News