திருச்சி அருகே சாலை விபத்து - ஒருவர் பலி
திருச்சி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் பலியானார், காயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதி
திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அன்னங்கோவில் பகுதி அருகே உள்ள தனியார் கல்லூரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று இரவு பயங்கர விபத்து ஏற்பட்டது.
வண்ணான் கோவில் பகுதியில் உள்ள தனியார் குளிர்பான நிறுவனத்திற்கு குளிர்பானங்கள் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று வண்ணான் கோவில் பகுதியில் நெடுஞ்சாலையை கடக்க முயன்றது. அப்போது திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக கண்டெய்னர் லாரி மீது நேராக மோதியது.
இதில் காரில் பயணம் செய்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மூன்று பேர் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ராம்ஜி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.