திருச்சியில் 30-ம் தேதி முதல்வர் பங்கேற்கும் விழா நடைபெறும் இடத்தில் ஆய்வு

திருச்சியில் 30-ம் தேதி முதல்வர் பங்கேற்கும் விழா நடைபெறும் கேர் கல்லூரி வளாகத்தில் இன்று அமைச்சர் நேரு ஆய்வு செய்தார்.

Update: 2021-12-23 07:47 GMT
திருச்சியில் வருகிற 3௦ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் விழா மேடை அமையும் இடத்தை அமைச்சர் நேரு இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 30ம் தேதி திருச்சி வருகிறார். திருச்சி- திண்டுக்கல் சாலை தாயனூர் பகுதியில் உள்ள கேர் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்டஉதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

இந்நிலையில் விழா நடைபெற உள்ள இடத்தை இன்று தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அமைச்சருடன் மாவட்ட கலெக்டர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, சௌந்தரபாண்டியன், திருச்சி மாநகர தி.மு.க. செயலாளர் அன்பழகன், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் துரைராஜ், கமலம் கருப்பையா மற்றும் அதிகாரிகள் சென்று இருந்தனர்.

Tags:    

Similar News