திருச்சி ஸ்ரீரங்கத்தில் வாய்ஸ் அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி ஸ்ரீரங்கத்தில் வாய்ஸ் அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் பசுமை வழியில் திருவிழா கொண்டாட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
தமிழ்நாடு அரசு சுற்றுசூழல் துறை மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தலின் படி, திருவிழாக்களை பாதுகாப்பான முறையிலும்,சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் நடத்துவது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வாய்ஸ் அறக்கட்டளை திருச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் முன்னின்று நடத்தினர்.
திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டம் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த நிகழ்வை சுகாதார ஆய்வாளர் மோகன் ராஜ் துவக்கி வைத்தார் . அப்போது இரசாயனம் கலந்த பொருள்களால் சுற்றுச்சூழல் மாசு அடைவதுடன் நீர் நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதைச் சுட்டிக்காட்டினார். விதைப்பந்துகளை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கொடுத்து, நிறைய மரங்கள் வளர்க்க கேட்டுக் கொண்டார். காவல் துறையினர் துணிப்பைகள் மற்றும் கையேடுகள் வழங்கினர்.
ஆட்டோ மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஸ்ரீரங்கம் ,மாம்பழச்சாலை, சாத்திரம் பேருந்து நிலையம் , காந்தி மார்க்கெட் , டிவிஎஸ் டோல்கேட், ரெயில் நிலையம், மத்திய பேருந்து நிலையம் மற்றும் விமான நிலையம் பகுதிகளில் தொடர்ந்து நடத்தினர். இரசாயனம் கலந்த பொருட்களையும், நெகிழி பொருட்களையும் நீர் நிலைகளில் போடவேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. நிகழ்ச்சிகளை வாய்ஸ் அறக்கட்டளை குழுவினர் ஜே.பிரகாஷ் குமார், கே .மணிகண்டன், ர் .பிரகாஷ் ராஜ் ,கே.செல்வகுமார் ஒருங்கிணைத்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இன்னும் சில நாட்களில் விநாயகர் சிலைகள் காவிரியில் கரைக்கபட உள்ள நிலையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.