நிரம்பி வழிந்த அரியாவூர் ஏரி நீர் மீது எம்.எல்.ஏ, மலர் தூவி வரவேற்பு
நிரம்பி வழிந்த அரியாவூர் ஏரி தண்ணீரை ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ, பழனியாண்டி மலர் தூவி வரவேற்றார்.;
நிரம்பி வழியும் அரியாவூர் ஏரி நீர் மீது பழனியாண்டி எம்.எல்.ஏ. மலர் தூவினார்.
பருவமழை காரணமாக ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட அரியாவூர் ஏரி நீண்ட வருடங்களுக்கு பிறகு நிரம்பி கலிங்கு வழியாக பாய்ந்து செல்கிறது. இந்த பகுதிக்கு சென்ற ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டி நிரம்பி வழியும் தண்ணீர் மீது மலர் தூவி வரவேற்றார்.
அவருடன் மணிகண்டம் ஒன்றிய செயலாளார் கருப்பையா, கவுன்சிலர் சண்முகம், ஊராட்சி மன்ற தலைவர்கள் அரியாவூர் மணிகண்டன், அம்மாபேட்டை காந்தி, குட்டப்பட்டு ஜார்ஜ், சேதுராப்பட்டி தங்கரத்தினம், உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.