திருச்சியில் ரயிலில் அடிபட்டு முதியவர் உயிரிழப்பு
திருச்சியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
திருச்சி முத்தரசநல்லூர் அருகில் உள்ள முருங்கபேட்டை பகுதியில் இன்று காலை கோயமுத்தூர்- மயிலாடுதுறை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற ஒருவர் சுமார் 30 அடி தூரம் தூக்கி வீசப்பட்டு உடல்கள் சிதறிய நிலையில் இறந்தார்.
தகவலறிந்த ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் ரயில்வே போலீசார் சென்று விசாரனண செய்தனர். விசாரனணயில் இறந்து போனவர் திருச்சி ஜீவா நகரை சேர்ந்த மாதவன் நம்மாழ்வார் (வயது 63) என்பது தெரிய வந்தது. பின்னர் திருச்சி ரயில்வே போலீசார் சிதறிய உடலை சேகரித்து பிரேத பரிசோதனைக்காக திருச்சி் அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக திருச்சி ஜங்ஷன் ரயில்வே போலீசார் வழக்க பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.