ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பக்தர்களை அமரவைத்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது.;

Update: 2021-09-20 05:45 GMT

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் அன்னதானம் வழங்கும்  திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில் தமிழ்நாடு முதல்லமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் ஆலோசனையின் பேரில் அன்னதானம்  வழங்கும் திட்டம் மீண்டும்  தொடங்கப்பட்டு உள்ளது.

சுமார் 548 நாட்களுக்கு பிறகு ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோயில் அன்னதான கூடத்தில் கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி மேற்பார்வையில் பக்தர்களை சமூக இடைவெளியுடன் அமர வைத்து வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டது.

அப்பொழுது கோயில் உதவி ஆணையர் கந்தசாமி, உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், மேலாளர் உமா ஆகியோர் உடன் இருந்தனர், நீண்ட நாட்களுக்கு பிறகு கோயிலில் அமர்ந்து அன்னதான உணவு அருந்தியதில் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News