ஸ்ரீரங்கத்தில் ஆதி பிரமோற்சவம்: நெல்லளவு கண்டருளினார் நம்பெருமாள்
ஸ்ரீரங்கத்தில் நடந்து வரும் ஆதி பிரமோற்சவ விழாவில் நெல்லளவு கண்டருளினார் நம்பெருமாள்.;
பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் ஆதி பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனி திருவிழா கடந்த பத்தாம் தேதி தொடங்கியது.
விழாவின் ஏழாம் நாளான இன்று உற்சவர் ஸ்ரீநம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் பூந்தேரில் எழுந்தருளி நெல் அளவை கண்டார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.