பேட்டவாய்த்தலை அருகே ஆட்டோ மோதிய விபத்தில் மூதாட்டி பலி
ஸ்ரீரங்கம் , பேட்டவாய்த்தலை அருகே ஆட்டோ மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், பேட்டவாய்த்தலை, உய்யகொண்டான் வாய்க்கால் பாலத்தின் அருகில், சுமார் 65 வயது மதிப்புதக்க மூதாட்டி ஒருவர், திருச்சி - கரூர் சாலையை கடக்க முயன்றார். அப் போது திருச்சியில் இருந்து, கரூர் நோக்கி சென்ற ஆட்டோ, அவர் மோதியது. இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே மூதாட்டி பலியானார்.
இறந்தவரின் உடலை, குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி சத்யா கொடுத்த புகாரின் அடிப்படையில், இறந்து போன மூதாட்டி யார்? என்பது குறித்து பேட்டவாய்த்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். மேலும், ஆட்டோ டிரைவர் தஞ்சாவூரை சேர்ந்த சரவணன் (வயது 52) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.