ஆடி அமாவாசையையொட்டி திருச்சி காவிரி கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ஆடி அமாவாசையையொட்டி திருச்சி காவிரி கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.;

Update: 2022-07-28 10:13 GMT

திருச்சி காவிரி கரை அம்மா மண்டபம் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக பக்தர்கள் குவிந்தனர்.

இன்று ஆடி அமாவாசையாகும். ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும், ஆடி அமாவாசையன்று கடல், ஆறு போன்ற நீர் நிலைகளில் பூஜைகள் நடத்தி முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுத்தால் அவர்களது பூரண ஆசி கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

அந்த வகையில் ஆடி அமாவாசையான இன்றைய தினம் திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி கரை அம்மா மண்டபம் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புரோகிதர்களிடம் தேங்காய், அரிசி, பூ, காய்கறிகள் மற்றும் தர்ப்பை புல் கொடுத்து பூஜைகள் செய்து வழிபட்டனர். இதன் காரணமாக அம்மா படித்துறை இன்று காலை முதல் பக்தர்கள் கூட்டத்தினால் நிரம்பி வழிந்தது. காவிரியில் தண்ணீர் கரை புரண்டு செல்வதால் திதி கொடுப்பதற்காக வந்த பெரும்பாலான பக்தர்கள் புனித நீராடினார்கள்.

Tags:    

Similar News