திருச்சி அருகே பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது- ரூ.1.74 லட்சம் பறிமுதல்

திருச்சி அருகே பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.1.74 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2021-10-13 07:00 GMT
திருச்சி அருகே பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது- ரூ.1.74 லட்சம் பறிமுதல்
  • whatsapp icon

திருச்சி மாவட்டம் அதவத்தூர், முத்து பிளாட்டில் உள்ள ஒரு வீட்டில் சூதாட்டம் நடப்பதாக சோமரசம்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் அந்த வீட்டின் உரிமையாளர் மணிகண்டன் என்பவர் இந்த சூதாட்ட கிளப்பை நடத்தியது தெரிய வந்தது. அதனைதொடர்ந்து அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உய்யகொண்டான் திருமலையை சேர்ந்த மூர்த்தி, உறையூரை சேர்ந்த பாரூக்,கீழ்கண்டார் கோட்டை நித்தியானந்தம், மாத்தூர் பாலசுப்ரமணி, இலுப்பூரை சேர்ந்த சீனிவாசன்,சிந்தாமணியை சேர்ந்த மகாமுனி,சிவா, சோமரசம்பேட்டையை சேர்ந்த சௌந்தர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 74ஆயிரத்து 800, மற்றும்,சீட்டு கட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News