ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஒரே நாளில் 2.16 லட்சம் பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பரமபதவாசல் திறப்பின் போது ஒரே நாளில் 2.16 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து உள்ளனர்.;

Update: 2023-01-03 14:46 GMT

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் பரமபதவாசல் வழியாக எழுந்தருளினார் உற்சவர் நம்பெருமாள்.

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த டிசம்பர் மாதம் 22ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 23ஆம் தேதியிலிருந்து பகல் பத்து உற்சவம் துவங்கியது. பகல் பத்து உற்சவத்தின்போது ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து வெவ்வேறு அலங்காரங்களில் புறப்பாடாகி அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஒவ்வொரு நாளும் அரையர்கள் சேவையுடன் நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சிகளில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பகல் பத்து உற்சவத்தின் பத்தாம் நாள் மோகினி அலங்காரம் நடைபெற்றது. மோகினி அலங்காரம் நிகழ்ச்சியை காண ஒரே நாளில் மட்டும் 81 ஆயிரத்து 754 பக்தர்கள் குவிந்தனர்.

மறுநாளான ஜனவரி 2ஆம் தேதி இராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் நிகழ்ச்சிகள் துவங்கியது. அன்றைய தினம் அதிகாலை 4 .45 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாக எழுத்தருளினார் உற்சவர் நம்பெருமாளுடன் சேர்ந்து சொர்க்கவாசலை கடந்தால் சொர்க்கத்தை அடையலாம் என்ற நம்பிக்கையின் காரணமாக ஏராளமான பக்தர்கள் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஒரே நாள் மட்டும் 2 லட்சத்து 16 ஆயிரத்து 39 பக்தர்கள் மூலவர் மற்றும் உற்சவரை தரிசனம் செய்ததாக ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைகுண்ட ஏகாதசி விழா துவக்கத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை விவரத்தை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அது வருமாறு.

வைகுந்த ஏகாகதசி பெருவிழா 23.12.2022 முதல் 02.01.2023 வரை. 

23.12.2022 ... > 33261

24.12.2022 ... >53149

25.12.2022 ... > 50633

26 .12.2022 ... > 48223

27.12.2022 ... > 49355

28.12.2022 ... > 45960

29.12.2022 ... > 44313

30.12.2022 ... > 43113

31.12.2022... > 49326

01.01.2023 ஸ்ரீநாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரம் - 81754

02.01.2023 பரமபத வாசல் திறப்பு -216039

வைகுண்ட ஏகாதசி விழா துவக்க நாள் முதல் ௨ம் தேதியான நேற்று வரை    7,15,126 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வைகுண்ட ஏகாதசி பெருவிழா வருகிற 10ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.

Tags:    

Similar News