ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உண்டியலில் கிடைத்தது 148 கிராம் தங்கம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் 148 கிராம் தங்கம் கிடைத்தது.
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று காலை உண்டியல் எண்ணும் பணி துவங்கியது. இணை ஆணையர் செ. மாரிமுத்து, ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் உதவி ஆணையர் ஆ.இரவிச்சந்திரன் ,கோயில் மேலாளர் கு.தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலையில் பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டது. இதில் ரூ. 64,45,942, ரொக்கப்பணம் மற்றும் தங்கம் 148 கிராமும் , வெள்ளி 990 கிராமும் மற்றும்233 வெளிநாட்டு ரூபாய் தாள்களும் கிடைக்க பெற்றது.