திருவானைக்கா ஆலய பங்குனி தேரோட்டம் .

திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேசுவரர் ஆலய பங்குனி தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Update: 2021-03-16 10:12 GMT

திருச்சி திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேஸ்வரி ஜம்புகேசுவரர் ஆலயம் பஞ்சபூத தலங்களில் நீர்த்தலமாக மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனித்தேரோட்டம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.  அதன்படி பிரம்மோற்சவ திருவிழாவான பங்குனித் திருவிழா, கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன் பின்னர் 11ம் தேதி எட்டுத்திக்கும் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து தினசரி சுவாமி, அம்பாளுடன் ரிஷபவாகனம், காமதேனுவாகனம், சூரியசந்திர பிரபை வாகனம் என பல்வேறு வாகனங்களில் வீதிஉலா கண்டருளும் வைபவம் நடைபெற்று வந்தது.

6ம் திருநாளான இன்று, விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு தரிசனம் செய்தனர்.  பக்தர்களின் பாதுகாப்பிற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News