திருச்சி முக்கொம்பு சுற்றுலா தலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில்,புத்தாண்டு கொண்டாட்டத்திற்காகவும், சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை காரணமாகவும் முக்கொம்பு சுற்றுலா தலத்திற்கு அதிக மக்கள் வருவார்கள் என்பதால், கொரோனா நோய் தொற்று பரவலை தவிர்க்கும் வகையில் திருச்சி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாதலமான முக்கொம்புவிற்கு இன்று (31 ம் தேதி) மாலை முதல் ஞாயிறு(03.01.21) மாலை வரை சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.