தொட்டியத்தில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தையொட்டி மரம் நடுவிழா

தொட்டியத்தில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தையொட்டி மரம் நடுவிழா நடைபெற்றது.

Update: 2021-09-14 10:47 GMT

தொட்டியம் ஒன்றிய குழு புனித ராணி  மரக்கன்று நட்டினார்

தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு திருச்சிமாவட்டம் தொட்டியம் ஒன்றிய ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட வட்டார அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் ஊட்டச்சத்து முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் மேலும் உள்ளூரில் கிடைக்கும் ஊட்டச் சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் மற்றும் கீரைகள் அனைத்து பயனாளிகளும் பயன்படுத்த வேண்டும் என்பதை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொட்டியம் வட்டாரக் குழந்தைகள் ஊட்டச்சத்து அலுவல வளாகத்தில் மரக்கன்றுகளை தொட்டியம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் புனித ராணி தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பெ. ராணி (பொறுப்பு) மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா, வட்டார ஒருங்கிணைப்பாளர் ராதிகா மற்றும் மேற்பார்வையாளர்கள், அலுவலக பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News