தொட்டியம் வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநாடு
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநாடு நடைபெற்றது.;
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 9-வது மாநாடு தொட்டியம் ஐயப்பன் கோவில் பின்புறம் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. வட்டக்குழு செயலாளர் பி.வரதராஜன் தலைமை வைத்தார். செயற்குழு உறுப்பினர் மு.க.முருகானந்தம் கொடியேற்றினார்.சி.சுந்தரம் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். எல்.சத்தியமூர்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சந்திரன் துவக்க உரையாற்றினார்.
வட்டச்செயலாளர் கே.முருகன் வேலை அறிக்கை வாசித்தார். ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் கே.மாரிமுத்து, ஏ.அண்ணாவி, எம்.அன்னராசு, கிளை செயலாளர் ஆர்.கோவிந்தசாமி ஆகியோர் மாநாட்டு தீர்மானங்களை வாசித்தனர்.
மாநாட்டில் தொட்டியம் காவிரி ஆற்றில் இருந்து லாலாபேட்டைக்கு தடுப்பணை அமைக்க வேண்டும், மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு போதிய டாக்டர்கள் மற்றும் ஊழியர்களை நியமனம் செய்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், பேரூராட்சிகளில் 100 நாள் வேலையை அமல்படுத்தி கிராமங்களில் 200- நாட்களாகவும் கூலி உயர்வை வழங்க வேண்டும், புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராமநாதன் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வி.எஸ்.இந்துராஜ் நிறைவுரை வழங்கினார். முடிவில் செயற்குழு உறுப்பினர் சின்னதுரை நன்றி கூறினார்.