தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் முசிறி வட்ட கிளை கூட்டம்

Retired Government Employee - தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் முசிறி வட்ட கிளை கூட்டம் தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.;

Update: 2022-09-05 07:36 GMT
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் முசிறி வட்டக்கிளை  கூட்டம் நடைபெற்றது.

Retired Government Employee -தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் )நடவடிக்கைக்குழு) முசிறி வட்டக் கிளையின் செப்டம்பர் மாதக் கூட்டம் நேற்று வட்டத் தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்த் தாய் வாழ்த்துக்குப்பின் துணைத் தலைவர் மு.பொன்னுசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். தலைவர் தம் உரையில் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை பெறுவதற்கு கருவூலத்தில் படிவம் கொடுத்தல், வாழ்நாள் சான்று ஆண்டு நேர்காணல் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

செயலாளர் திருஞானம் சங்க மாதாந்திர அறிக்கை வாசித்தார்.சங்க செப்டம்பர் மாத செயல்பாடுகளை விளக்கினார். கூட்டத்தில் வரவு, செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.துணைத்தலைவர் நா.சண்முகசுந்தரநாதன் நன்றி கூற கூட்டம் நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவு பெற்றது.கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News