தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க முசிறி கிளை கூட்டம்
Government Employee -தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் முசிறி கிளை கூட்டம் நடைபெற்றது.;
Government Employee -திருச்சி மாவட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் (நடவடிக்கை குழு) அக்டோபர் மாதக் கூட்டம் ஞாயிறு பிற்பகல் 3.30.மணிக்கு துணைத்தலைவர் நா.சண்முகசுந்தரநாதன் தலைமையில் நடைபெற்றது.தமிழ்த்தாய் வாழ்த்துக்குப்பின் துணைத் தலைவர் மு.பொன்னுசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.தலைவர் தம் உரையில் புதிய உறுப்பினர் சேர்க்கைப்பற்றியும், சங்கக்கூட்டத்தில் அதிக உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன் பெற வேண்டுமென வலியுறுத்தினார்.
செயலாளர் செ.திருஞானம் சங்க மாதாந்திர அறிக்கை வாசித்தார்.இம்மாதம் சங்க உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியதை விவரித்தார்.புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் பயன்கள் மற்றும் குறைபாடுகள் பற்றி விளக்கினார்.
பொருளாளர் சி.செல்வராஜு வரவு, செலவு அறிக்கை தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றார்.
இணைச் செயலாளர் அ.அமல்ராஜ் நன்றி கூற நாட்டுப்பண்ணுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2