தொட்டியத்தில் மாநில அளவிலான ஜூடோ விளையாட்டு போட்டிகள்

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் மாநில அளவிலான ஜூடோ விளையாட்டு போட்டிகள் நடந்தது.;

Update: 2021-10-28 03:50 GMT
தொட்டியத்தில் மாநில அளவிலான ஜூடோ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு ஜூடோ சங்கம் சார்பில் மாநில அளவிலான மினி சப்-ஜூனியர், சப்-ஜூனியர், ஜூனியர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் திருச்சி மாவட்டம் தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளை கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி.எஸ்.கே.பெரியசாமி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக சங்க மாநில தலைவர் விஜய்மோகனமுரளி, துணைத்தலைவர்கள் டாக்டர் ராமசுப்பிரமணியன், பாலகணபதி, மாநிலச் செயலாளர் என்.முரளி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விளையாட்டுப் போட்டிகளில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், சேலம்,ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட ஆண் பெண் மற்றும் ஜூடோ வீரர்கள் கலந்து கொண்டனர். விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஜூடோ பிரிவு பயிற்சியாளர் உமாசங்கர், டெக்னிக்கல் கமிட்டி இயக்குனர்கள் மணிகண்டன், பார்த்திபன் ஆகியோர் முன்னின்று நடத்தினர்.

போட்டிகளில் கலந்துகொண்டு மாநில அளவில் தொடர்ந்து 14-வது ஆண்டாக சப் ஜூனியர் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கரூர் மாவட்ட அணியினர் பெற்றனர். மினி சப் ஜூனியர் பிரிவில் சென்னை அணியும், இளையோர் பிரிவில் சென்னை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணியினர் பெற்றனர். 

பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு சுழல் கோப்பை சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஜூடோ வீரர்கள் மற்றும் வீரர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஜெயபால் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News