சமத்துவபுரம் சீரமைப்பு பணியை திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு
முசிறி அருகே சமத்துவபுரம் சீரமைப்பு பணியை திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.;
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள காட்டுக்குளம் கிராமத்தில் சமத்துவ புரம் உள்ளது. இங்குள்ள சமத்துவ புரத்தில் பழுதடைந்த வீடுகளை சீரமைப்பு செய்யும் பணிகள் சுமார் ஒரு கோடியே 12லட்சம் மதிப்பீட்டில் நடந்து வருகிறது. இந்த பணிகளை திருச்சி மாவட்ட கலெக்டர் மா. பிரதீப்குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.