ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் சங்கத்தின் முசிறி வட்ட கிளை கூட்டம்
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் சங்கத்தின் முசிறி வட்ட கிளை கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி வட்டக் கிளை கூட்டம் முசிறியில் நடைபெற்றது. இறை வணக்கத்துடன் தொடங்கிய கூட்டத்திற்கு சங்கத்தின் வட்ட தலைவர் பெ.முத்துகிருஷ்ணன். தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மு.பொன்னுசாமி அனைவரையும் வரவேற்றார்.
தலைவர் தம் உரையில் இந்த ஆண்டு வருமான வரி செலுத்துவதற்கான விவரங்களை விளக்கிக் கூறினார். மேலும் 06-01-2024. சனிக்கிழமை காலை திருச்சியில் நடைபெற்ற மாவட்டக் கூட்ட நிகழ்வுகளை எடுத்துரைத்தார்.
செயலாளர் செ.திருஞானம். மாதாந்திர செயல் அறிக்கை வாசித்தார். உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் முடித்து வைக்கப்பட்டதாக கூறினார். புதிய முறைப்படி 2024 ஜனவரி முதல், கருவூலத்தில், ஓய்வூதியர்கள் தங்கள் நேர்காணலை(MUSTARING) ஓய்வு பெற்ற மாதமும், அடுத்த மாதமும் சலுகை காலமாக உள்ளதால், இரண்டு மாதத்திற்குள் செய்ய வேண்டுமென கூறினார்.
பொருளாளர்: சி.செல்வராஜு வரவு, செலவு ,அறிக்கை வாசித்து ஒப்புதல் பெற்றார். ஆசிரியை பாலா தம் கருத்துக்களை எடுத்துரைத்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அமல்ராஜ், பாலா ஆசிரியை ஆகிய இருவரும் கேக், இனிப்பு, காரம், தேநீர்,ஆகியவற்றை வழங்கி சிறப்பித்தனர். அனைவருக்கும் இந்த ஆண்டுக்கான சங்க காலண்டர் வழங்கப்பட்டது. ஞான சௌந்தரி அனைவருக்கும் அவர் சார்பாக மாதாந்திர காலண்டர் வழங்கினார். இறுதியாக இணைச் செயலாளர் கே.பாலசுப்பிரமணியன். நன்றி கூற, நாட்டுப் பன்னுடன் கூட்டம், இனிதே நிறைவு பெற்றது.
இந்த கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கமுட்டேஷன் பிடித்தம், 15 வருடமாக இருப்பதை 12 வருடமாக குறைக்க வேண்டுமாய் தமிழக அரசை, கேட்டுக் கொள்ளப்பட்டது.
குறைந்தபட்ச ஓய்வூதியம், ரூபாய் 7850/= ஆக இருப்பதை, மத்திய அரசு வழங்குவதைப்போல் 9000/= ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது.