முசிறி அருகே லாரி கவிழ்ந்து ஒருவர் பலி-5 பேர் காயம்

முசிறி அருகே லாரி கவிழ்ந்து ஒருவர் பலியானார். 5 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2021-09-19 08:40 GMT
முசிறி அருகே செங்கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியானார்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள கருப்பு கோயில் கொட்டம் என்ற இடத்தில் அய்யம்பாளையத்தில் இருந்து தண்டலைக்கு செங்கல் ஏற்றி சென்ற லாரி வளைவில் திரும்பும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் பெரமூரை சேர்ந்த சுதாகர், ராஜாத்தி, வீரமணிபட்டியைச் சேர்ந்த சந்திரா, நாச்சம்பட்டியை சேர்ந்த மலர்கொடி என்கிற மலர் வேளகாநத்தத்தை சேர்ந்த லட்சுமணன் ஆகியோர் படுகாயமடைந்து முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். சுதாகர், ராஜாத்தி, சந்திரா, மலர்கொடி, ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் அய்யம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி (வயது47) என்பவர் படுகாயமடைந்து இறந்துவிட்டார் . இந்த விபத்து குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவர் துரைராஜ் என்பவரை தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News