இல்லம் தேடி கல்வி திட்ட வாகனம் எதற்கு பயன்படுகிறது என கொஞ்சம் பாருங்கள்

திருச்சி மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட வாகனம் எதற்கு பயன்படுகிறது என கொஞ்சம் பாருங்கள்.

Update: 2021-12-21 11:53 GMT

'இல்லம் தேடி கல்வி' ...தமிழக அரசின் உயரிய திட்டங்களில் ஒன்றாக பட்டி தொட்டி முதல் பட்டணம் வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்று, அதன் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால் ஒரு ஆண்டுக்கும் மேலாக மூடப்பட்ட பள்ளிகள், அதனால் மாணவச் செல்வங்கள் மத்தியில்  ஏற்பட்ட கல்வித்தடைகளை சரி செய்து இடைநிற்றலை தவிர்த்து மீண்டும் அவர்களிடம் பள்ளிக்கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்வி துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பிரச்சார வாகனங்களில் கலைக்குழுவினர் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள்.

கல்வியை கற்கண்டாக்க... என்ற வாசகங்களுடன் கூடிய இல்லம் தேடி கல்வி திட்ட வாகனத்தில் இருந்து இறங்கும் நபர் அதற்கான சீருடை டீ சர்ட்டுடன்சென்று டாஸ்மாக் மதுபான கடைக்கு சென்று வரிசயைில் நின்று பாட்டில் வாங்கிவிட்டு  கையில் மதுபான பாட்டில்களுடன் மீண்டும் வாகனத்தில் ஏறும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக பரவி வருகிறது.

இந்த காட்சியானது திருச்சி மாவட்டம் தொட்டியம் என்ற இடத்தில் பதிவாகி உள்ளது. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் இவர்களை நம்பி எப்படி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது என்ற கேள்வி எழுந்தது.

இதற்கிடையில் சம்பந்தப்பட்ட கலைக்குழுவை இல்லம் தேடி கல்விதிட்ட விழிப்புணர்வு பிரச்சார பணியில் இருந்து நீக்கி இருப்பதாக திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பால முரளி இன்று ஒரு அறிவிப்பின் மூலம் தெரிவித்து இருக்கிறார்.

Tags:    

Similar News