காட்டுப்புத்தூரில் பரம்பொருள் இயற்கை உழவர் குழு மூலம் விற்பனை தொடக்கம்

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரில் பரம்பொருள் இயற்கை உழவர் குழு மூலம் விற்பனை தொடங்கப்பட்டது.;

Update: 2021-12-16 06:31 GMT

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூரில் பரம்பொருள் இயற்கை உழவர் உற்பத் தியாளர்கள் குழு மற்றும் இயற்கையில் விளைந்த பொருட்கள் விற்பனை அங்காடி தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

விழாவில் உற்பத்தியாளர்கள் குழு தலைவர் பத்மநாபன், செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இங்கு இயற்கை முறையில் விவசாயம் செய்யப்பட்ட பாரம்பரிய அரிசி வகைகள், தானிய வகைகள் காய்கறிகள், பழவகைகள் கிடைக்கும் எனவும், மேலும் நெல் மற்றும் சிறுதானிய வகைகள் அரைத்து தரப்படும் எனவும், இதனை இப்பகுதி விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News