முசிறியில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ. 5 லட்சம் பறிமுதல்
முசிறியில் தேர்தல் பறக்கும் படையினர் 5 லட்ச ரூபாய் பறிமுதல் .
முசிறியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 5 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாவட்டம் முசிறியில் கூட்டுறவு கடன் சங்கத்தில் இருந்து வங்கிக்கு கட்டுவதற்காக கொண்டு செல்லப்பட்ட 5 லட்சம் ரூபாய் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் பறக்கும் படையினர் விதி மீறல்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் முசிறியில் பறக்கும் படை அலுவலர் பன்னீர்செல்வம் மற்றும் அலுவலர்களுடன் தீவிர ரோந்து பணியில் ஈடுபடிருந்தார்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இருவரை நிறுத்தி சோதனையிட்டபோது, வந்தவர் தா.பேட்டை அருகே உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் செயலாளர் ராஜேஸ்வரி என்பதும் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் 5 லட்சம் ரூபாய் பணம் கையில் வைத்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் சங்கத்தின் பணத்தை செலுத்துவதற்காக கொண்டு செல்கிறேன் என செயலர் ராஜேஸ்வரி தெரிவித்தார். அதற்குரிய ஆவணங்கள் அவரிடம் எதுவும் இல்லாததால் ரூபாய் 5 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் முசிறி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.