முசிறி தொகுதியில் தி.மு.க.கூட்டணி கட்சிகள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்
முசிறி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 3 இடங்களில் தி.மு.க.வினர் மத்திய அரசுக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி மாவட்டம் ,முசிறி, தொட்டியம், தா.பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க.வினர் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து பெட்ரோல், டீசல் ,கியாஸ் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசின் நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொட்டியத்தில் முசிறி தொகுதி எம்.எல்.ஏ.வும் ,வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான காடுவெட்டி தியாகராஜன் தலைமையிலும் முசிறியில் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையிலும் தா.பேட்டையில் ஒன்றிய செயலாளர் கே .கே .ஆர் .சேகரன் தலைமையிலும் பொதுக்குழு உறுப்பினர்கள் கணேசன் உள்ளிட்ட பலர் முன்னிலையிலும் மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்தும், கண்டித்தும் கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க. கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.