விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க கோரி முறிசியில் புறநகர் வடக்கு மாவட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.;

Update: 2022-01-22 15:15 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்.

தமிழ்நாட்டில் பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க திமுக அரசை வலியுறுத்தி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் விவசாயிகளோடு இணைந்து இன்று (22.1.2022) முசிறி கைகாட்டி அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி தலைமையில் தாங்கினார்.

இதில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கிருஷ்ணன், பூனாட்சி, அண்ணாவி, மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் செல்வராசு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட கழக அவைத் தலைவர் பிரின்ஸ் தங்கவேல், இந்திராகாந்தி, பரமேஸ்வரி முருகன், ரத்தினவேல், மல்லிகா சின்னசாமி மற்றும் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள், மற்றும் விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News