தொட்டியத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-09-21 08:07 GMT
தொட்டியம்  பேரூராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

திருச்சி மாவட்டம் தொட்டியம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பு குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொட்டியம் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் கலந்தாலோசனை கூட்டம் திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் எஸ்.ஜெயசித்ரா தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தொட்டியம் பேரூராட்சி செயல் அலுவலர் கரு.சண்முகம், தொட்டியம் கிராம நிர்வாக அலுவலர் ஆ.அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 18 வயதுக்குள் திருமணம் செய்வதால் குழந்தைகளுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்தும் அறியாமையில் சிறுவயதிலேயே கர்ப்பமடையும் குழந்தைகளின் நிலைமை குறித்தும், குழந்தைகள் தொழிலாளர்கள், பெண் கொத்தடிமைகள்,கொரொனா தொற்று ஏற்பட்டு பெற்றோர் இறந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உதவுதல், ஆதரவற்ற பெண் குழந்தைகளை விடுதியில் சேர்ப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

கூட்டத்தில் தொட்டியம் சுகாதார அலுவலர் பழனிவேல், திருஈங்கோய்மலை ஸ்ரீ லலிதா மஹிளா சமாஜ குழந்தைகள் இல்ல காப்பாளர் ஆர்.சுமதி, தொட்டியம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக மேற்பார்வையாளர் பி.வளர்பிறைசெல்வி, தனிநபர் தகவல் சேகரிப்பாளர் எஸ்.செல்வராணி, தொட்டியம் காவல் நிலைய பெண் காவலர் ரம்யா, தொட்டியம் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை அமுதா உள்ளிட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவ மாணவிகள் மகளிர் சுய உதவிக் குழுவினர் ஊர் பொதுமக்கள் பேரூராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News