தொட்டியம் அருகே ஏழூர் பட்டியில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே ஏழூர் பட்டியில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள் விழா திருச்சிமாவட்டம் தொட்டியம் அருகே உள்ள ஏலூர்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கொண்டாடப்பட்டது.ஏழூர்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவரும் திருச்சி புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளரும் அ.தி.மு.க ஒன்றிய கவுன்சிலருமான ஏலூர்பட்டி தங்க.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்து கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஏலூர்பட்டி ஊராட்சிமன்றத்தலைவர் செல்லம்மாள்.மதுரைவீரன், மெடிக்கல் சகாதேவன், மளிகைகடைமுத்து,தர்மகர்த்தா ரத்தினம், கோபால்,மூர்த்திசெட்டியார், சர்க்கரை முருகேசன், கிளைசெயலாளர் சுப்பிரமணியன்,கிருஷ்ணன், விக்னேஷ் முதலிப்பட்டி செல்வராஜ், ஏழூர்பட்டி சுப்ரமணியன், செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.