திருச்சி மாவட்டம் முசிறியில் 60 மில்லி மீட்டர் மழை பதிவு

திருச்சி மாவட்டம் முசிறியில் அதிகபட்சமாக 60 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Update: 2021-09-21 08:27 GMT

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று அதிகாலை முதல் இன்று அதிகாலை வரை மழை பெய்தது.

விடிய விடிய பெய்த மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் இன்று காலை 8 மணிவரை கல்லக்குடியில் 32.4, லால்குடியில் 24.20 ,நந்தியாறு தலைப்பில் 58.6, புள்ளம்பாடியில் 38. 60 ,தேவி மங்களத்தில் 36, சமயபுரம் 31.40, சிறுகுடி 12 ,வாத்தலை அணைக்கட்டு 23.6, முசிறி 60, நவலூர் குட்டப்பட்டு 4.20, பொன்மலை 2.80, துறையூர் 10, விமான நிலையம் 6.50 ,திருச்சி ஜங்ஷன் 2.50 ,திருச்சி டவுன் 3 மில்லி மீட்டர் என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக முசிறியில் 60 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News