தொட்டியம் அருகே 749 பயனாளிகளுக்கு ரூ.1.15 கோடி அரசு நலத்திட்ட உதவிகள்
தொட்டியம் அருகே நடந்த சிறப்பு மனு நீதி முகாமில் 749 பயனாளிகளுக்கு ரூ.1.15 கோடி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் வட்டம், எம்.களத்தூர் கிராமம், தலைமலைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (11.01.2024) நடைபெற்ற சிறப்பு மனு நீதி நாள் முகாம் நிறைவு விழாவில் முசிறி சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ராஜன் ஆகியோர் பல்வேறு துறைகளின் சார்பில் 749 பயனாளிகளுக்கு ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
தொலைதூரத்து கிராம மக்களும் அரசின் திட்டங்களை அறிந்து பயன்பெற வேண்டும் என்பதற்காக சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மக்களுக்கான பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். துறை வாரியாக செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் குறித்து மக்கள் பயனடைகின்ற வகையில் உரிய துறை அலுவலர்கள் மக்களிடம் எடுத்துக் கூறியும், மக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று அதன்மீது உடனடி தீர்வு கண்டு திட்ட உதவிகள் வழங்கிடும் வகையிலும் இந்த சிறப்பு மனுநீதிநாள் முகாம் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு துறை அலுவலர்களும் தங்கள் துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்கள்.
இன்று நடைபெற்ற மனுநீதி நிறைவு நாள் முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூபாய் 1.82 இலட்சம் மதிப்பீட்டில் திருமண உதவித்தொகையும், 06 பயனாளிகளுக்கு ரூபாய் 86400 மதிப்பீட்டில் முதியோர் ஓய்வூதிய தொகையும், 05 பயனாளிகளுக்கு ரூபாய் 72,000 மதிப்பீட்டில் விதவை உதவித்தொகையும், 01 பயனாளிக்கு ரூபாய் 18 ஆயிரம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையும், 75 பயனாளிகளுக்கு ரூபாய் 16.55 இலட்சம் மதிப்பீட்டில் இயற்கை மரண உதவித்தொகைக்கான ஆணையும், 66 பயனாளிகளுக்கு ரூபாய் 1.60 இலட்சம் மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகையும், 05 பயனாளிகளுக்கு ரூபாய் 2.50 இலட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாக்களும், வேளாண்மைத்துறையின் சார்பில் 18 பயனாளிகளுக்கு ரூபாய் 1.34 இலட்சம் மதிப்பீட்டில் வேளாண்மை உபகரணங்களும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 54 பயனாளிகளுக்கு ரூபாய் 29.20 இலட்சம் மதிப்பீட்டில் உபகரணங்களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூபாய் 15890 மதிப்பீட்டில் தையல் இயந்திரம் மற்றும் மூன்று சக்கர மதிவண்டியும், தமிழ்நாடு ஊரக பகுதி வாழ்வாதார இயக்கம் சார்பில் 05 பயனாளிகளுக்கு ரூபாய் 2.50 இலட்சம் மதிப்பீட்டில் தொழில் சமுதாய முதலீட்டு நிதியும், தமிழ்நாடு ஊரக பகுதி வாழ்வாதார இயக்கம் சார்பில் 05 பயனாளிகளுக்கு ரூபாய் 23.50 இலட்சம் மதிப்பீட்டில் தொழில் துவக்க கடன் தொகையினையும், சமூக நலத்துறையின் சார்பில் 26 பயனாளிகளுக்கு ரூபாய் 13 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டு பெண்குழந்தைகளுக்கான பத்திரமும், வேளாண் சந்தைப்படுத்துதல் மற்றும் வணிகத்துறையின் சார்பில் 07 பயனாளிகளுக்கு ரூபாய் 13.22 இலட்சம் மதிப்பீட்டிலும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூபாய் 13,380 மதிப்பீட்டில் தையல் இயந்திரமும், 10 பயனாளிகளுக்கு ரூபாய் 8 இலட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் விபத்து நிவாரண உதவித் தொகையும், 85 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா மாற்றமும், 38 பயனாளிகளுக்கு கணினி பட்டா மாற்றமும், 117 பயனாளிகளுக்கு உட்பிhpவு பட்டா மாற்றமும், 194 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா நகல்களும், 08 பயனாளிகளுக்கு வாரிசு சான்றிதழ்களும் என மொத்தம் 749 பயனாளிகளுக்கு ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முசிறி சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன், முசிறி வருவாய் கோட்டாட்சியர் ராஜன் ஆகியோர் வழங்கினார்கள்.
சிறப்பு மனு நீதி நாள் முகாம் நிறைவு விழாவில் பல்வேறு அரசுத் துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து மக்களின் பார்வைக்கு அமைக்கப்பட்ட திட்டவிளக்கக் கண்காட்சி அரங்குகளை முசிறி சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன், முசிறி வருவாய் கோட்டாட்சியர் ராஜன் ஆகியோர் பார்வையிட்டார்கள்.
இந்நிகழ்வுகளில், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) செல்வம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கோ.தவச்செல்வம், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் எஸ்தர் ஷீலா, தொட்டியம் வருவாய் வட்டாட்சியர் கண்ணாமணி, தொட்டியம் ஒன்றியக் குழுத்தலைவர் கிருஷ்ணவேணி, ஒன்றியக் குழு துணைத் தலைவர் சத்தியமூh;த்தி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுந்தரராஜன், எம்களத்தூர் ஊராட்சித் தலைவர் தண்டபாணி மற்றும் அரசுத்துறை உயர் அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.